Tag: lullaby

தூங்காயோ என் கண்ணமுதே

For English translation of this poem, please view below YouTube video and turn captions on...

ஆராரிரோ... தூங்காயோ என் கண்ணமுதே இனிய உறக்கம் வந்து கண் தழுவிடும் நேரம் இரவில் கமலம்போல் சுருங்கியதுன் தேகம் கனவைத் தேடிச் சென்றாயோ நான் கண்ட நிஜமே உன் குரல் கேட்காமல் வாடுது என் ஸ்வரமே! ஆராரிரோ... தூய உந்தன் புன்னகைக்கும் நிகருண்டோ இப்புவியில் தாயினுள்ளம் நிறையுமம்மா உன் மழலை மழையில் விண்மீன்கள் தனில் தோன்றிய என் முத்துச் சரமே கண் அயர்ந்து துயிலாயோ நான் பெற்ற வரமே!  ஆராரிரோ... உனைக் காணாமல் இருண்ட இரவின் நொடிகள் நீரென்று நகறுதம்மா காலத்தின் கைகள் ஆழ் கடலின் அமைதியிலே பயிரான அற்புத ரத்தினமே மாசற்ற தூரிகையால் தெய்வம் தீட்டிய சித்திரமே! தூங்காயோ என் கண்ணமுதே ஆராரிரோ...