For English translation of this poem, please view below YouTube video and turn captions on…
பார்ப்பவை எல்லாம் பாலைவனம்,
பருகுபவை எல்லாம் கானல் நீர்.
வண்ணம் இல்லாத வானவில்,
நுரை இல்லா கடல்.
தூக்கம் இல்லாத கனவுகள்,
கனவிலும் அவள் நினைவுகள்.
கவலை இல்லா மனம்,
மனதின் சுவற்றிலும் அவள்…
முகம் காட்டா கண்ணாடி,
காண்ப தெல்லாம் அவள்.
நிதம் நாடும் உதயம்
கதிர் வந்து பாயும் அவள் கண்கள்.
கார் வந்து இருள் சேர்க்க
நிலவொன்று கண் கூச
மெய்யென்று உன் பிம்பம் தெரிகிறதே
நிழலென்ன நிஜமென்ன குழம்பியதே…
மூடனுக்கு மறுபெயர் காதலனாம்…
அரண் எந்தன் இதயம் எனினும்
அதனை நீ வென்றாயடா
யுகம் ஆயினும் மறவேன் எனை
வருடிய உன் தீண்டலை
நோக்கின்றி மலர் வாட
உனை மட்டும் உளம் நாட
வேரன்று என்னுள் நின்றாயடா
உயிர் மூச்சில் நீ வந்து கலந்தாயடா
ஆசை பித்தம் கொண்ட காதலியே…
Leave a Reply
You must be logged in to post a comment.